×

‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா!

 

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ‘ஜெயிலர்’. ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இந்த படம் வசூல்  வேட்டையாடிவருகிறது. கிட்டத்தட்ட 600 கோடி வசூலை நெருங்கியுள்ளது.  இந்த நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, படம் இம்மாதம் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அதற்கான போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சூப்பர் ஸ்டாரின் அதிரடி ஆக்ஷனில் வெளியான இந்த படத்தில் அவருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஜெயிலர் படத்தின் ஒடிடி ரிலீஸ் அறிவிப்பால் ரஜினிகாந்தின் ரசிகர்கள் சற்று அப்சட்டாகியுள்ளனர். படம் வெளியான ஒரே மாதத்திலையே ஓடிடியில் வெளியீடா? என கேள்விகளை கேட்டு வருகின்றனர்.