×

‘தைரியமா இருங்க’.. நெல்சனுக்கு சூப்பர் அட்வைஸ் சொன்ன ரஜினிகாந்த் !

 

இயக்குனர் நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென சில அறிவுரைகளை கூறியுள்ளார். 

மாஸ்டர் படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார்.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் விரைவில் மீதமுள்ள படப்பிடிப்பு முடிக்க நெல்சன் வேகமாக பணியாற்றி வருகிறார். 

இதையடுத்து வரும் ஏப்ரல் மாதத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் படம் தோல்வியை சந்தித்த நிலையில் ஜெயிலர் படத்தை எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற வெறியுடன் நெல்சன் பணியாற்றி வருகிறாராம். அதனால் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்கிறாராம்.

இதை கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், நெல்சனிடம் சில அட்வைஸ்களை கூறியுள்ளார். அதில் ஆரோக்கியத்தை பாத்துக்கங்க. ரொம்ப சிரமப்பட வேண்டாம். கரெக்ட்டா பண்ணுங்க. ஓடுற படம் கண்டிப்பா ஓடும். தைரியமாக இருங்க என கூறினார். இதை கேட்ட நெல்சன் உற்சாகமாகிவிட்டாராம்.