×

புதிய சாதனை படைத்த ‘ஜெயிலர்’... ரிலீசுக்கு முன்னரே வியக்க வைக்கும் டிக்கெட் விற்பனை !

 

பிரபல திரையரங்கில் ‘ஜெயிலர்’ ரிலீசுக்கு முன்னரே அதிகமாக டிக்கெட்டுகளை விற்று சாதனை படைத்துள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்‘.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.   சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் நாளை காலை உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் தமிழக திரையரங்கு வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 900 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கில் சுமார் 32 ஆயிரம் டிக்கெட் ரிலீசுக்கு முன்னரே விற்கப்பட்டுள்ளது. ரோகினி திரையரங்க வரலாற்றில் அதிகமான டிக்கெட் விற்பனையானது இதுவே முதல்முறை. இதனால் படக்குழுவினரும், திரையரங்க உரிமையாளரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.