×

என்னங்க சொல்றீங்க... தமன்னா ரஜினிக்கு ஜோடி இல்லையா ?... ‘ஜெயிலர்’ புதிய அப்டேட் 

 

‘ஜெயிலர்’ படத்தில் தமன்னாவின் கதாபாத்திரம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜெயிலர்'. ஜெயில் கதைக்களம் கொண்ட இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.‌ இந்த படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  ‌இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், சிவ ராஜ்குமார், சுனில், தமன்னா, யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தமன்னாவின் 'காவாலா' பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள தமன்னாவின் கேரக்டர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அது தவறு என்றும் ரஜினிக்கு ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளதாகவும், தமன்னா சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு நடிகை கதாபாத்திரத்தில் தமன்னா நடித்துள்ளாராம். அதனால் தான் ‘காவாலா’ பாடல் தமிழ் மற்றும் தெலுங்கு கலந்து உருவானது என்று கூறப்படுகிறது.