×

ஜெயிலர் ரிலீசாகி ஒராண்டு நிறைவு! 
 

 

இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ் குமார், மோகன்லால், விநாயகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்த கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் வெளியாவதற்கு முன் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் ஜெயிலர் வெளியானது முதல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது.