×

10 கோடி பார்வையாளர்களை கடந்தது ஜெயிலர் பாடல்

 

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான படங்களுள் ஒன்று ‘ஜெயிலர்’. மக்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்று வசூலில் பட்டையை கிளப்பிய இந்த படம் சுமார் 700 கோடி வசூலித்து சாதனை  படைத்தது. அதனை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினி, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார்களை பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர். அது மட்டுமல்லாமல் மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு கறி விருந்து, தங்க காசு, கேடயம் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்நிலையில், படத்தில் இடம் பெற்றிருந்த ஹக்கூம் என்ற பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.