☰
×

ஜீவாவுடன் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’  படத்தில் நடிக்கும் ஹீரோயின் யார் தெரியுமா ?

 

பாலா இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான ‘நாச்சியார்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இவானா. தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்த அவர் சில வருட இடைவெளிக்கு பிறகு ‘லவ் டுடே’, ‘மதிமாறன்’, ‘லெட்ஸ் கெட் மேரிட்’, ‘கள்வன்’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார். மீண்டும் ஓரிரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவாவுடன் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படம் குறித்து இவானா பேசுகையில், ‘காதல், ரொமான்ஸ் கலந்த காமெடி படம் இது. படத்தின் டைட்டில் போலவே படமும் ஜாலியாக இருக்கும். ரிலேஷன்ஷிப்பில் இருந்து கல்யாணம் வரை நடக்கக்கூடிய விஷயங்கள், அதிலுள்ள சுவாரஸ்யங்கள், சிக்கல்களை காமெடியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.