×

வெற்றிகொண்டான் என்ற கேரக்டரில் விஜய்-ஜனநாயகன் பட விமர்சனம்

 

சிறைக்கைதி விஜய்யை அவரது அம்மா ரேவதி கடைசியாக பார்க்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற அழைத்துச் சென்று வந்த போலீஸ் அதிகாரி கவுதம் வாசுதேவ் மேனன், திடீரென்று ஒரு விபத்தில் மரணம் அடைகிறார். ஆதரவற்ற அவரது மகள் மமிதா பைஜுவுக்கு சித்தப்பா ஸ்தானத்தில் பாதுகாவலனாக மாறும் விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் சொன்னபடி மமிதா பைஜுவை ராணுவத்தில் சேர்க்க முயற்சிக்கிறார். அப்போது நரேன் கொடுத்த ஃபைலை முதலமைச்சர் நாசரிடம் கொடுத்த மமிதா பைஜுவை கொல்ல பாபி தியோல், ஆட்களை அனுப்புகிறார்.
ஆப்பிரிக்காவையே துவம்சம் செய்த சமூக விரோதி பாபி தியோல், மிகப்பெரிய சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார். இதையறிந்த விஜய் என்ன செய்கிறார் என்பது மீதி கதை. 
முழு படத்தையும் தளபதி வெற்றிகொண்டான் என்ற கேரக்டரில் விஜய் தனது தோளில் சுமந்து, படத்தில் வில்லன்களை பொளந்து கட்டி வழக்கம்போல் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தி இருக்கிறார். மமிதா பைஜு அசத்தலாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு வேலையில்லை. பிரியாமணி, ரேவதி, ஸ்ரீநாத், ஸ்ரீமன், புஸ்ஸி என்.ஆனந்த், நாசர், ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் வந்து போகிறார்கள்.