தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
Oct 1, 2024, 13:00 IST
ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த 27-ந் தேதி திரைக்கு வந்த படம் தேவரா. படத்தின் கதாநாயகியாக ஜான்விகபூர் நடித்திருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் ஜான்வி கபூர் முதல் முறையாக அறிமுகமான படம் தேவரா. மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாராகி வெளிவந்துள்ள இந்த படம் சர்வதேச அளவில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாளிலேயே ரூ.172 கோடி வசூலை பெற்றது. மூன்று நாட்களில் 307 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.தென்னிந்திய திரை உலகில் தான் நடித்த முதல் படமே பெரும் வரவேற்பை பெற்றதையொட்டி ஜானவிகபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் தாவணி மற்றும் விதவிதமான தோற்றங்களில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.