×

‘ஜப்பான்’ ஓடிடி ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

 

கார்த்தி நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜப்பான்’ இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அனு இமானுவேல், விஜய் மில்டன், சுனில் ஆகியோர்  நடித்துள்ளார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைகளத்தில் தயாராகியுள்ள ஜப்பான் படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் படத்தின் ஓடிடிட் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  அதன்படி படம் வரும் டிசம்பர் 11ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகியுள்ளது.