ஜேசன் சஞ்சய் - சந்தீப் கிஷன் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ்...!
May 7, 2025, 12:37 IST
சந்தீப் கிஷன் பிறந்தநாளை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைகா தயாரிக்க தமன் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் படத்தின் நாயகன் சந்தீப் கிஷன் இன்று பிறந்தநாள் காண்பதால் அவரை வாழ்த்தி படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்ட சில காட்சிகள் படமாக்கப்படுவது இடம் பெற்றுள்ளது.