ஓடிடி தளத்தில் சாதனை படைத்த ஜவான் திரைப்படம்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. மேலும், ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து ஓடிடி தளத்திலும் படம் வெளியானது.
இந்த நிலையில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. அந்த வகையில் இதுவரை இந்த திரைப்படத்தை ஒரு கோடியே 40 லட்சம் மணி நேரங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.