×

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது ஜவான்... குடும்பத்துடன் கண்டு ரசித்த அட்லி

 

உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஜவான் திரைப்படம் வெளியானது. இயக்குநர் அட்லி குடும்பத்தினருடன் படத்தை கண்டு ரசித்தார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க, படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் தீபிகா படுகோனே சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. படத்தின் இயக்குநர், அட்லி, அனிருத் ஆகியோர் குடும்பத்தினருடன் படத்தை கண்டு ரசித்தனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலரும் அட்லிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.