×

ஜெயம் ரவி 2.0 - மும்பையில் புதிய ஆரம்பம்

 
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்திருந்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். இதற்கு பதில் அளித்த ஜெயம் ரவியின் மனைவி, "இது எனது கவனத்துக்கு வராமலும் எனது ஒப்புதல் இல்லாமலும் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு'' என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும், நெருக்கமாக பழகுவதாகவும் இதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளார் என்றும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. ஆனால் கெனிஷா பிரான்சிஸ் குறித்து பரவிய செய்திகளுக்கு ஜெயம் ரவி மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜெயம் ரவி தற்பொழுது மும்பை சென்றுள்ளார். சென்னையிலிருந்த அவர் புதிய அலுவலகம் ஒன்றை மும்பையில் அமைத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தி திரையுலக தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்தி படத்திற்கான சில பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.