×

ரிலீசுக்கு தயாரான 'அகிலன்'... சென்சார் குறித்த முக்கிய அப்டேட் 

 
 ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘அகிலன்’ படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.  

‘பூலோகம்’ படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அகிலன்’. ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மறைந்த பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் ஜெயம் ரவி ஆன்ட்டி ஹீரோவாக நடித்துள்ளார். கதாநாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் போலீசாக நடித்துள்ளார்.  ஹார்பர் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் சென்சார் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அகிலன் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவது உறுதியாகியுள்ளது.