×

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் நித்யா மேனன்.. புதிய படத்தின் சூப்பர் அப்டேட் 

 

 ஜெயம் ரவி மற்றும் நித்திய மேனன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனக்கென தனி முத்திரை குத்தியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதன்பிறகு சைரன், இறைவன் உள்ளிட்ட படங்களை நடித்து முடித்துள்ளார். இதையடுத்து தற்போது ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. ‘JR 33’ என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ளார். வணக்கம் சென்னை, பேப்பர் ராக்கெட் உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருத்திகா, தற்போது ஜெயம் ரவியின் படத்தை இயக்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடிகயாக நித்யா மேனன் நடிக்கவுள்ளார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க காதல் ரொமான்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது.