ஜெயம் ரவி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. ‘JR 30‘ படத்தின் புதிய அப்டேட் !
நடிகர் ஜெயரம் ரவி பிறந்தநாளில் அவர் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘அகிலன்‘ படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜேஷ் எம் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் நட்ராஜ், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
அக்கா - தம்பி உறவு குறித்து பேசும் கதைக்களத்தை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி ஜெயம் ரவி பிறந்தநாளையொட்டி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.