×

ஜூலையில் ரிலீசாகும் ‘இறைவன்’.. ஜெயம் ரவி படத்தின் புதிய அப்டேட் ! 

 

 ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘இறைவன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘தனி ஒருவன்’ படத்திற்கு நடிகர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’. 'ஜன கன மன' படத்தின் இயக்குனர் அகமது இந்த படத்தை இயக்கி வருகிறார். ஜெயம் ரவியின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

ஒரு கொலை சம்பவத்தை மையமாக வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தை வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.