ஜெயம் ரவியின் 34வது படம் பூஜையுடன் தொடக்கம்..!
Dec 14, 2024, 15:55 IST
நடிகர் ஜெயம் ரவியின் 34வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை டாடா படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கவுள்ளார். டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் பாபு. டாடா படத்தில் கவின், அபர்ணா தாஸ் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது கணேஷ் பாபு இயக்கும் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த திரைப்படம் சமூக பிரச்சனையை சார்ந்து இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் நாயகியாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவாலின் மகள் த்வதி ஜிவால் நடிக்கவுள்ளார். மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில், சக்தி, காயத்ரி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.