ஜெயம் ரவியின் ‘பிரதர்’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்...
Nov 28, 2024, 19:05 IST
ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் நாளை ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதே சமயம் இவர் சிவகார்த்திகேயனின் 25வது படத்தில் வில்லனாக நடிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. இதற்கிடையில் ஜெயம் ரவி, பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களை இயக்கிய எம் ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பூமிகா சாவ்லா, பிரியங்கா அருள் மோகன், நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.