×

‘ராதே ஷ்யாம்’ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

பிரபாஸ் நடித்து வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார். நடிகர் பிரபாஸ், பாஹூபலி படத்திற்குப் பிறகு இந்தியா மட்டுமல்ல உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு வானளாவிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 400 கோடி, 500 கோடி என பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார். அந்த பிரம்மாண்ட வரிசையில் ராதா கிருஷ்ணகுமார் என்பவரின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படம்
 

பிரபாஸ் நடித்து வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார்.

நடிகர் பிரபாஸ், பாஹூபலி படத்திற்குப் பிறகு இந்தியா மட்டுமல்ல உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார். தற்போது பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு வானளாவிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 400 கோடி, 500 கோடி என பிரம்மாண்ட பட்ஜெட் படங்களில் நடித்துவருகிறார்.

அந்த பிரம்மாண்ட வரிசையில் ராதா கிருஷ்ணகுமார் என்பவரின் இயக்கத்தில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். இப்படம் ஐரோப்பாவில் நடக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹேக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் ராதே ஷ்யாம் படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த பிரம்மாண்ட படைப்பில் தற்போது மலையாள நடிகர் ஜெயராம் இணைந்துள்ளார்.

பிரபாஸுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட ஜெயராம் “அற்புதமான நடிகர் பிரபாஸ் படத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ராதே ஷியாம் படம் ஒரு இதயத்தைத் தூண்டும் கதை. நான் நடிக்கும் அடுத்த படம். அவரது விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாகும் இப்படத்தைக் காண ஆவலாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.