×

ஜீவா - ப்ரியா பவானி ஷங்கர் நடிக்கும் 'பிளாக்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! 

 

அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்த 'பிளாக்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பல்வேறு வித்தியாசமான படங்கள் மூலம் ரசிகர்களுக்கு பிடித்த நாயகனாக வலம் வருபவர் ஜீவா. சமீப காலமாக இவரது படங்கள் போதிய வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில், தற்போது 'பிளாக்' என்ற படத்தில் நடித்துள்ளார். பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் (Potential studios) நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இதில் ஜீவா உடன் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானமாக கொண்டு ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவமாக இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும், அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். அப்படிப்பட்ட கதைக்களத்துடன் உருவாகி வருகிறது பிளாக் திரைப்படம்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டிமாண்டி காலனி 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பிளாக் படமும் த்ரில்லர் படமாக இருப்பதால் இதுவும் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.