×

'ஜென்ம நட்சத்திரம்' பட ஹீரோவை காப்பாற்றிய பேய் -எப்படி தெரியுமா ?

 

ரத்தீஷ், சுபாஷிணி தயாரிப்பில் இயக்குனர் மணிவர்மன் இயக்கத்தில் தமன் அக்ஷன் - மால்வி மல்ஹோத்ரா ஆகியோர் நடித்த 'ஜென்ம நட்சத்திரம்' படம் கடந்த வாரம் வெளியானது . படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள். விழாவில் தமன் அக்ஷன் பங்கேற்று பேசும்போது, ''நான் பல படங்கள் நடித்துள்ளேன்.ஆனால் இந்த படத்துக்கு தான் வெற்றி விழா கொண்டாடி இருக்கிறேன். அப்படி இப்படி என்று கடைசியில் எனக்கு பேய் தான் கை கொடுத்துள்ளது. பேய் தான் என்னை காப்பாற்றியது  என்னை மட்டுமல்ல, எங்கள் படக்குழுவையும் தான். இந்த படம் எனக்கு நிறைய அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அதையெல்லாம் உணர்ந்துள்ளேன். எங்கள் படக்குழு இணைந்து மீண்டும் ஒரு புதிய படத்தை உருவாக்குகிறோம். நான் கதை, திரைக்கதை எழுதியுள்ளேன். புதிய படத்துக்கான ' 'அப்டேட்'கள் விரைவில் வெளியாகும்'' என்றார்.

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகர் தமன் குமார் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக ஆச்சரியங்கள், சட்டம் ஒரு இருட்டறை, சும்மா நச்சுன்னு இருக்கு, சேது பூமி, 6 அத்தியாயம், அயோத்தி, ஒரு நொடி, பார்க் என்று பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜென்ம நட்சத்திரம் படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

தமன் குமாரின் சினிமா வாழ்க்கையில் இந்தப் படம் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது. த்ரில்லர் கதையை தேர்வு செய்து நடித்து அதனை இப்போது ஹிட்டும் கொடுத்துள்ளார்