ஜெயராம் நடிக்கும் நகைச்சுவை குடும்ப படம் -ஜோடி யார் தெரியுமா ?
‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ ஆகிய படங்களை தயாரித்த ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி, ரெட்டாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் ஜி.சஞ்சன் இணைந்து தயாரிக்கும் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. பெயரிடப்படாத இப்படத்தை தி ஷோ பீப்புள் சார்பில் ஆர்யா வழங்குகிறார். ஜோதிகா நடித்திருந்த ‘ராட்சசி’, அருள்நிதி நடித்திருந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ ஆகிய படங்களை எழுதி இயக்கிய சை.கவுதம் ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.
பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, எண்ணங்கள், உறவுகள், அவர்களுக்கு இடையிலான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினருடன் ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு படமாக இது உருவாகிறது. ஜெயராம், சிம்ரன், ‘வாழை’ பொன்வேல், தேவிகா சதீஷ், பக்ஸ் நடிக்கின்றனர். தீபக் ஒளிப்பதிவு செய்ய, அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். அருள் ஈ.சித்தார்த் எடிட்டிங் செய்ய, மகேந்திரன் அரங்கம் அமைக்கிறார். கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுத, அனுஷா விஸ்வநாதன் நடனப்பயிற்சி அளிக்கிறார்.