‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ –‘மாமதுர’ பாடல் வெளியீடு.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் பாடலான மாமதுர பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர்களான எஸ். ஜெ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்துள்ள படம் ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ இந்த படத்தை முதல் பாகத்தின் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்கியுள்ளார். அவரது இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், பாபி சிம்ஹா, லெட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பட்டையை கிளப்பியது. குறிப்பாக அந்த படத்தில் நடித்ததற்காக பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது.
இந்த நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், வரும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான ‘மாமதுர’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.