×

வெற்றி தியேட்டரை அலறவிட்ட ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ டீம்.  

 

தீபாவளி ரேஸில் உள்ள கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை கண்டு ரசித்துள்ளனர் ஜிகர்தண்டா டீம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.  ஒரு ரவுடி, சினிமாவுக்குள் வரும் போது என்ன நடக்கும் என்பதை அழகாகவும், அழுத்தமாகவும், வலி நிறைந்ததாகவும் படமாக்கியுள்ளனர் படத்தில் எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த நிலையில் இன்று படம் வெளியாகியுள்ளதை தொடர்ந்து ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை காண்டு ரசித்துள்ளனர்  ஜிகர்தண்டா டீம். வெற்றி திரையரங்கில் எஸ்.ஜே சூர்யா, லாரன்ஸ், சந்தோஷ் நாராயணன் ஆகியோரை பார்த்ததும் ரசிகர்கள் கூக்குரல் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.