ஜீவாவின் ‘அகத்தியா’ ஓடிடியில் ரிலீஸ் அப்டேட்...!
Mar 25, 2025, 14:50 IST
ஜீவா நடித்துள்ள ‘அகத்தியா’ படத்தின் ஓடிடியில் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷி கண்ணா, ராதாரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘அகத்தியா’. வேல்ஸ் நிறுவனம் மற்றும் வார்ம் இந்தியா நிறுவனம் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரான இப்படத்தினை பி.வி.ஆர் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், அகத்தியா திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் மார்ச் 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படங்களில், பெரும் நஷ்டத்தினை ஏற்படுத்திய படம் ‘அகத்தியா’ என்பது குறிப்பிடத்தக்கது.