ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்... மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன், கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதிலும் கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்து சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதன்படி தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவ்வாறு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான இன்று (டிசம்பர் 25) திரைப் பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தனது மகனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.