‘தக் லைஃப்’ படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியானது !
Apr 18, 2025, 14:45 IST
கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.படத்தை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை கமல் எழுதியுள்ளார். வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் & ஆதித்யா ஆர்.கே உள்ளிட்டோர் இணைந்து பாடியுள்ளனர்.