×

ஜானி மாஸ்டரை கட்டிப்பிடித்து ஆனந்தக்கண்ணீர் விட்ட குடும்பத்தினர்...!

 

தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடன இயக்குனர் ஜானி, ஒரு பெண் நடன இயக்குனரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அவர் சிறையில் இருந்து வெளியே வந்து வீட்டிற்கு சென்றார்.

வீட்டிற்குள் நுழைந்ததும், மகன், மகள் மற்றும் குடும்பத்தினரை சந்தித்த வீடியோவினை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். அந்த வீடியோவில், "37 நாட்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது; எனது குடும்பத்தினர், நலம் விரும்பிகள், பிரார்த்தனைகள் ஆகியவையே என்னை இங்கு வரச் செய்தது.

உண்மை சில நேரங்களில் மறைந்தாலும், அது அழியாது; ஒருநாள் நிச்சயமாக வெல்லும். எனது மொத்த குடும்பமும் கடந்து வந்த இக்கட்டான வாழ்க்கை, என் இதயத்தை என்றென்றும் துளைக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஏற்கனவே ஜானி மாஸ்டர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என்றும் அவர் குற்றவாளியல்ல என்றும் அவரது மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.