குழந்தைகள் உடன் ஜாலி ட்ரிப்... நயன்- விக்கி புகைப்படங்கள் வைரல்...!
May 30, 2025, 16:16 IST
நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உடன் ஜாலி ட்ரிப் சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மூக்குத்தி அம்மன்-2, டாக்சிக், ராக்காயி, டியர் ஸ்டூடன்ட்ஸ், சிரஞ்சீவி 157வது படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படி பிசியாக நடித்த வந்தபோதும் ஓய்வு கிடைக்கும்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரண்டு மகன்களுடன் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் நயன்தாரா. அந்த வகையில் தற்போது நயன்தாரா தனது குடும்பத்துடன் நெதர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அந்த நாட்டின் பல பகுதிகளுக்கு தங்கள் மகன்களுடன் சென்றபோது எடுத்த புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாகிராமில் நயன்தாரா வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.