×

ப்ரீ புக்கிங்கிலேயே நல்ல வசூல் வேட்டை செய்யும் ஜுனியர் என்டிஆரின் தேவாரா..? 

 
சினிமாவை ரசிப்பவர்கள் இப்போதெல்லாம் நல்ல கதை கொண்ட படமா என்று தான்  பார்க்கிறார்கள், அதன் மொழியை பார்ப்பது இல்லை. அப்படி ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்க்கும் ஒரு படமாக தெலுங்கில் தயாராகும் தேவாரா படம் உள்ளது. கொரடலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள இப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் முதல் படம் நடித்துள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், படம் ரூ. 300 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தேவாரா படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே செம ஹிட், நாளை செப்டம்பர் 27, தேவாரா படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் புரொமோஷனையும் படக்குழுவினர் ஓய்வு இன்றி செய்து வருகிறார்கள். நாளை படம் வெளியாகவுள்ள நிலையில் இதுவரை படம் ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 75 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.