காந்தாரா படத்தில் நடிக்கும் ஜூனியர் என்.டி .ஆர் -எந்த பாகத்தில் நடிக்கிறார் தெரியுமா ?
காந்தாரா படத்தின் முதல் பாகம் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வசூலையும் வாரி குவித்த்தது .இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்ப்பை பெற்றது .இதனால் இதன் அடுத்தடுத்த பாகத்தை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர் .அதனால் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகம் வெளிவரவுள்ளது
தற்போது ரிஷப் ஷெட்டி, காந்தாரா 2 படத்தை இயக்கி வருகிறார். காந்தாரா: அத்தியாயம் 1 என்ற பெயரில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கியும் வருகிறார். காந்தாரா படத்திற்கு இது முன்னோட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டமாக இந்தப் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி பான் இந்தியா அளவில் இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.
ஜூனியர் என்.டி.ஆர் காந்தாரா 3ம் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இந்த மூன்றாம் பாகத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் ஜூ.என்.டி.ஆரை நடிக்க வைக்க ரிஷப் ஷெட்டி திட்டமிட்டுள்ளாராம். தற்போது இந்த யோசனை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகத் தெரிகிறது. ஜூ.என்.டி.ஆர், ரிஷப் ஷெட்டி இருவரும் நல்ல நண்பர்கள். நீண்ட காலமாக இவர்களுக்கிடையே நட்பு நீடித்து வருகிறது. சமீபத்தில் ஜூ.என்.டி.ஆர் கர்நாடகா சென்றபோது, அங்குள்ள பிரபல கோயில்களை நேரில் அழைத்துச் சென்று காண்பித்தார் ரிஷப் ஷெட்டி. சிறப்பு பூஜைகளையும் செய்து வைத்தார். காந்தாரா 3ல் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க இவர்களின் நட்பு ஒரு முக்கிய காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது.