×

கமல்ஹாசன் பாராட்டிய படம் -மாரீசன் மக்கள் மனதில் இடம் பெறுமா ?

 
இந்த வாரம் பல படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது .இதில் மக்களின் அதிக எதிர்பார்ப்புள்ள படமென்றால் அது தலைவன் தலைவி மற்றும் மாரீசன் படங்கள்தான் .இதில் மாரீசன் படம் வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம், மாரீசன். இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தை, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வடிவேலு, அல்சைமர்ஸால் பாதிக்கப்பட்டவராக நடிக்க, அவரிடம் திருட முயலும் நபராக தயா எனும் கேரக்டரில் பகத் பாசில் நடித்திருக்கிறார். கோவை சரளா, லிவிங்க்ஸ்டன் உள்ளிட்டோரும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் டிரைலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதைத்தாண்டி, பத்திரிக்கையாளர்களுக்கான ஷோ சமீபத்தில் நடந்தது. இதிலிருந்து படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அதே போல, நடிகர் கமல்ஹாசனும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டி இருக்கிறார்