×

கபாலி படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு.. கலைப்புலி தாணு வாழ்த்து..

 


இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கபாலி. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் மக்களிடையே சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கபாலி படம் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்து, 9ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதால், அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

null



அதில், மனிதம் நிறை புனிதர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் சார், தேக பலம்,பாத பலம் பெற்று,ஆயுள் சதம் கடந்து வாழிய பல்லாண்டு, வாழ்க வளமுடன்! என குறிப்பிட்டுள்ளார்.