×

மகத் நடிப்பில் உருவாகியுள்ள 

‘காதல் Condition apply’... ரிலீஸ் குறித்த அறிவிப்பு !

 

மகத் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதல் Condition apply’ படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இளம் நடிகரான மகத், ‘மங்காத்தா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். அதன்பிறகு வல்லவன், காளை, பிரியாணி, வடகறி, சென்னை 28 -2, அன்பானவன் அடங்காதன் அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன், ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது ‘காதல் Condition apply’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். 

இந்த படத்தை ஆர்.அரவிந்த் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சனா மக்புல் நடித்துள்ளார். இவர்களுடன்  திவ்யதர்ஷினி, விவேக் பிரசன்னா, அபிஷேக், மகேஸ்வரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை நிதின் சத்யாவின் ஷ்வேத் தயாரிப்பு நிறுவனமும், ரவீந்தர் சந்திரசேகரனின் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவுள்ளது.