×

 'என்னை இழுக்குதடி' வீடியோ பாடலை  வெளியிட்ட `காதலிக்க நேரமில்லை' படக்குழு 

 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் காதலிக்க நேரமில்லை. இப்படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

<a href=https://youtube.com/embed/4LLD98SiI18?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/4LLD98SiI18/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">
குறிப்பாக இத்திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், இப்படத்தில் யோகி பாபு, லால், வினய், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் பிப்ரவரி 11 ஆம் தேதி நெபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
திரைப்படத்தில் இடம்பெற்ற மிகப்பெரிய ஹிட் பாடலாக அமைந்த என்னை இழுக்குதடி பாடலின் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது.