×

ஜிவி பிரகாஷ்- ரைசா கூட்டணியின் 'காதலிக்க யாருமில்லை'... 2 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்!

 

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் காதலிக்க  யாருமில்லை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.


ஜிவி பிரகாஷ் தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக வலம் வருகிறார். இசையமைப்பாளராக வெற்றி பெற்றுள்ள அவர் தற்போது நடிகராக தேர்ந்து வருகிறார். ஜிவி பிரகாஷ் மற்றும் ரைசா வில்சன் கூட்டணியில் காதலிக்க யாருமில்லை என்ற திரைப்படம் உருவாகி வந்தது.

இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவங்கப்பட்டது. கொரோனா பாதிப்பு, நடிகர்களின் தேதிகள் உள்ளிட்ட காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்குகிறார். மூணாரில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் யோகிபாபு, கௌசல்யா, செந்தில், ஆனந்த்ராஜ், குரு சோமசுந்தரம் சாரா மற்றும் மணிகண்டன் ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிகை ரைசா மூணாரில் உள்ள புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இப்படம் ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஜிவி ப்ரகாஷே இசையமைக்கிறார்.