×

ரொமான்ஸில் கலக்கும் ஜெயம்ரவி- வெளியானது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் லுக் போஸ்டர்.

 

கிருத்திகா உதயநிதி மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் தயாராகிவரும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

முன்னணி ஹீரோவான ஜெயம்ரவி தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்திற்கு “ காதலிக்க நேரமில்லை’ என தலைப்பு வைத்துள்ளனர். இதில் நித்யா மேனன் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவூஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் வினய், யோகிபாபு, லால், டி ஜே பானு ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த நிலையில்  படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ஜெயம்ரவி, நித்யா மேனனுடன் ரொமான்ஸ் செய்கிறார். தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகளை எதிர்பார்க்கலாம்.