×

ஹாரர் காமெடி படத்தில் காஜல் அகர்வால்... ‘கோஸ்டி’ டிரெய்லர் வெளியீடு !

 

முழுக்க முழுக்க ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள ‘கோஷ்டி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோஸ்டி’. இந்த படத்தில் பிரபல நடிகையான காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இப்படத்தை சீஃட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் இணைந்து யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன்   இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்ஸி, தங்கதுரை, ஜெகன், ஊர்வசி, சத்யன், ‘ஆடுகளம்’ நரேன், மனோபாலா,  மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் உள்ள இந்த படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது. 

<a href=https://youtube.com/embed/KHeRGZJLp7k?autoplay=1&mute=1&start=38><img src=https://img.youtube.com/vi/KHeRGZJLp7k/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" style="border: 0px; overflow: hidden;" width="640">