×

மெழுகுசிலையாக மாறிய நடிகை ‘காஜல் அகர்வால்’- அழகிய புகைப்படங்கள்.

 

நடிகை காஜல் அகர்வாலின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி, காண்போரை வாவ் சொல்ல வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கவனம் செலுத்திவந்த காஜல் அகர்வால், கடந்த 2020ஆம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் காஜல். குடும்பம், வேலை என இரண்டையும் சமாளித்து வரும் காஜல் சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் காஜல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளது. மெழுகு சிலைபோல அழகிய புடவையில் காஜல் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இதோ, இந்தியன்2 படத்தில் முக்கிய வெடத்தில் அவர் நடித்துள்ளார் என்பதும் விரைவில் படம் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.