×

சல்பேட்டா படத்திற்காக வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் கலையரசன்… ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோ!

பா ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்திற்காக கலையரசன் கடுமையாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை ஆர்யா வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததை அடுத்து கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. பாதியில் நின்ற படங்கள் அனைத்தும் மீண்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் சல்பேட்டா படக்குழுவும் முழுவீச்சில் தயாரிக்கவிட்டதாகத் தெரிகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்பேட்டா படம் உருவாகி வருகிறது. இப்படம் பாக்சிங் கதைக்களத்தைச் சுற்றி
 

பா ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்திற்காக கலையரசன் கடுமையாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை ஆர்யா வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசு 75 நபர்களுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததை அடுத்து கோலிவுட் வட்டாரம் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டது. பாதியில் நின்ற படங்கள் அனைத்தும் மீண்டும் வேலைகளைத் தொடங்கிவிட்டன. அந்த வரிசையில் சல்பேட்டா படக்குழுவும் முழுவீச்சில் தயாரிக்கவிட்டதாகத் தெரிகிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்பேட்டா படம் உருவாகி வருகிறது. இப்படம் பாக்சிங் கதைக்களத்தைச் சுற்றி உருவாகி வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.

தற்போது ஆர்யா வெளியிட்டுள்ள வீடியோவில் கலையரசன் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறார். பாக்சிங் அடிப்படையிலான படம் என்பதால் உடலை மெருகேற்றி வருகிறார் கலையரசன். “ரஞ்சித் சார் மற்றும் கலையரசன் உடன் இறுதி கட்ட ஷூட்டிங்கிற்கு திரும்பிவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.