×

‘கள்வன்’ படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியீடு.

 

ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்து, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி. தில்லி பாபு தயாரிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. பிவி சங்கர் 'கள்வன்' படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.  ஜிவி. பிரகாஷ்ஷுடன் இணைந்து இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்துள்ளனர். பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இவர்களளோடு இணைந்து இந்த படத்தில் தீனா, ஜி. ஞானசம்பந்தம், வினோத் முன்னா இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கமெடி அட்வென்சர் படமாக தயாராகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு  முடிந்து போஸ்ட புரொடக்க்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து  வருகிறது.

பிவி சங்கருடன் இணைந்து ரமேஷ் அய்யப்பன் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து படத்திற்கான வசனத்தையும் எழுதியுள்ளனர். இந்த நிலையில் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நாளை மாலை 04.44 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்து போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது.