×

'இந்தியன் 2' படத்திற்காக பிரம்மாண்ட செட்... ஷூட்டிங் எங்கே நடக்கிறது தெரியுமா ?

 

கமலின் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

'விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு புதிய படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி வருகிறார் உலகநாயகன் கமலஹாசன். அந்த வகையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன்' 2 படத்தில் நடித்து வருகிறார். விபத்து காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இந்த படப்பிடிப்பு கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கியது. 

இதுயடுத்து சென்னை, திருப்பதி, பீகார் உள்ளிட்ட இடங்களில் பல கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்காக திருப்பதியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கமல் மற்றும் சித்தார்த் நடிக்கும் மிக முக்கிய காட்சி படமாக்கப்பட உள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் வரும் ஏப்ரலுக்குள் முடித்து விரைவில்  'இந்தியன் 2' படத்தை வெளியிட ஷங்கர் முடிவு செய்துள்ளார். இந்த படத்தில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த்த்,  பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தனர்.