கமல்ஹாசன் தற்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறார் தெரியுமா ?
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’, ‘வீர தீர சூரன்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அருண்குமார், திடீரென்று கமல்ஹாசனுடன் இணைவது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. அறிவிப்பில் கமல்ஹாசன் கருப்பு நிற சட்டை மற்றும் ஆலிவ் பச்சை நிற பேண்ட் அணிந்து, கையில் அரிவாளுடன் டெரர் லுக்கில் இருந்தார். கூடவே, ‘தோ வாரேன்’ என்று குறிப்பிட்டு இருந்தது. தற்போது ‘சண்டியர்’ என்ற தலைப்பு பரிசீலனையில் இருக்கிறது.
‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களை தொடர்ந்து கமல்ஹாசன், ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 3’ படத்திலும், நாக் அஸ்வின் இயக்கும் ‘கல்கி 2898 ஏடி 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதற்கு முன்பு `சண்டியர்’ என்ற தலைப்பை தனது படத்துக்கு சூட்டியிருந்த கமல்ஹாசன், அப்போது பலத்த சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, அதற்கு `விருமாண்டி’ என்று பெயர் மாற்றி நடித்திருந்தார்.