கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் முக்கிய அறிவிப்பு.. வேற லெவல் வீடியோ ரிலீஸ்..!
Oct 10, 2024, 16:00 IST
நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ThugLife’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ( அன்புமணி, அறிவுமணி) இயக்கத்தில் திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கமல்ஹாசனின் 237 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தின் திரைக்கதை முழுவதுமாக தயாராகி விட்டதாகவும் அடுத்த கட்டமாக நட்சத்திரங்கள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த பணிகள் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைந்து ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி அதே ஆண்டில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.