‘வேட்டையாடு விளையாடு’ படத்தை தொடர்ந்து ரீ ரிலீசாகும் கமலின் அடுத்த படம்.
Sep 16, 2023, 23:02 IST

பழைய படங்களுக்கு சமீபகாலமாக மவுசு கூடிக்கொண்டே செல்கிறது. தொடர்ந்து நடிகர்களின் படங்கள் தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வேட்டையாடு விளையாடு’ சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து கமலில் ‘பேசும் படம்’ விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் ‘பேசும் படம்’ இந்த படம் ‘புஷ்ப விமானா’ என்ற பெயரில் கன்னடத்திலும்,’ புஷ்பக விமானம்’ என்று தெலுங்கிலும், ‘புஷ்பக்’ என இந்தியிலும், ‘பேசும் படம்’ என தமிழிலும் ரிலீஸ்ஆனது. படத்தில் வரும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு கூட பெயர் கிடையாது, வசனமும் கிடையாது. நடிகர்களின் உடல் மொழி, முகபாவனை மூலமாகவே ரசிகர்களை கவர்ந்த இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று தந்தது.