“கேப்டனின் நியாயமான கோபம் எனக்கு பிடிக்கும், அந்த கோபத்தின் ரசிகன் நான்”- ‘கமல்ஹாசன்’
மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகரும், மக்கள் நீதி மைய்ய தலைவருமான கமல்ஹாசன்.
இரவு பகல் பாராது திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மைய்ய தலைவருமான கமல்ஹாசன், விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். தொடர்ந்து கேப்டனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல் “ எளிமை, நட்பு, உழைப்பு மற்றும் பெருந்தன்மை ஆகிய அத்தனை வார்த்தைகளை சேர்த்து ஒரு மனிதருக்கு கூறவேண்டும் என்றால் அது சகோதரர் விஜயகாந்துக்கு மட்டுமே பொருந்தும். அவரது நியாயமான கோபம் எனக்கு பிடிக்கும். அந்த கோபத்தின் ரசிகன் நான் இப்படிபட்ட நேர்மையான மனிதனை இழந்திருப்பது என்னைப் போன்றவர்களுக்கு தனிமைதான்” என பேசியுள்ளார்