☰
×

எம்.எஸ்.சுப்புலட்சுமியின்  திரைப்பட விழாவில் கமல் என்ன பேசினார் தெரியுமா ?

 

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இந்த படத்துக்கு ‘எம்.எஸ். - எ லெகஸி ஆன் ஸ்கிரீன்’ என தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கில் ‘ஜெர்சி’, ‘கிங்டம்’ படங்களை இயக்கிய கவுதம் தின்னனூரி இப்படத்தை இயக்குகிறார். எம்.எஸ்.சுப்புலட்சுமியாக ராஷ்மிகா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். கீதா ஆர்ட்ஸ், ராக்லைன் என்டர்டெயின்மென்ட், பென்னி வாசு பிலிம்ஸ் சார்பில் அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ், பென்னி வாசு தயாரிக்கிறார்கள்.
படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியது:
இன்று சினிமா உலகில் பான்-இந்தியா என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை என்னவென்றால், பல தசாப்தங்களுக்கு முன்பே இந்தியாவின் முதல் நிஜமான பான்-இந்திய சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மா மட்டும்தான். அவரது தெய்வீகக் குரலும் இசையும் மொழிகள், எல்லைகள் மற்றும் பிராந்தியம் கடந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் கட்டிப்போட்டது