×

அடிதூள்... விரைவில் தொடங்கும் நாயகன் கூட்டணி.. கமலின் புதிய படத்தின் சூப்பர் அப்டேட் !

 

மணிரத்னம் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வரும் உலக நாயகன் கமலஹாசன், அடுத்து எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. அந்த வகையில் எச்.வினோத், மணிரத்னம், பா ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோரின் பெயர்கள் அடுத்த படத்தை இயக்கும் பட்டியலில் இருந்தது. அதேநேரம் ‘இந்தியன் 2’ படத்திற்கு பிறகு குறுகிய காலத்தில் எச்.வினோத் படத்தி நடித்துவிட்டு மணிரத்னம் படத்தில் இணைவார் என்று கூறப்பட்டது. 

ஆனால் கமலின் அடுத்த இயக்குனர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கமலை அடுத்து இயக்குவது மணிரத்னம் தான் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. ‘நாயகன்‘ படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பிறகு 36 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. 

கமலின் 234வது படமாக உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.   இப்படத்தில் 7 மாநில மொழி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாம். ஏற்கனவே திரைக்கதை இறுதி செய்யும் பணிகள் முடிந்துவிட்டதாகவும், தற்போது நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.